பத்மினிதான் படத்தோட ஹீரோ - விஜய் சேதுபதி
, புதன், 5 பிப்ரவரி 2014 (10:52 IST)
ரம்மி படத்தின் தோல்வியை விஜய் சேதுபதி ஏற்கனவே கணித்திருப்பார் போல. படத்தை குறித்து பாஸிடிவ்வாக அவர் சொன்ன ஒரு துணுக்குக்கூட இல்லை. ரம்மிக்கும் சேர்த்து பண்ணையாரும் பத்மினியும் படத்தை கொண்டாடுகிறார். படத்தைக் குறித்து பேசும் போதே நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அருவியாக கொட்டுகிறது விஜய் சேதுபதியிடம்.
பண்ணையாரும் பத்மினியும் உங்களை ரொம்பவே கவர்ந்திருப்பது தெரிகிறதே...?எல்லாப் படமுமே ஆத்மார்த்தமா பிடிச்சுதான் பண்றேன். ஆனா என்னன்னு தெரியலை இந்தப் படம் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருந்தது. அதுக்கு என் நண்பன் அருண் குமாருக்கு நன்றி சொல்லணும். பொதுவா நமக்கு பச்சை பசேல்னு பார்க்கும் போது ப்ரெஷ்ஷான ஃபீல் கிடைக்கும். அந்த மாதிரி மனுசனுக்குள்ளேயுள்ள நல்ல நெகிழ்வான சம்பவங்களை வச்சு செய்த அழகான ஸ்கிரிப்ட்தான் பண்ணையாரும் பத்மினியும்.