Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை சந்திப்பு குழுவின் சிறப்புப் பேட்டி!

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2012 (16:11 IST)
நெல்லை சந்திப்பு வெ‌ள்‌ளிய‌ன்ற ு வெளியானது. மீடியம் பட்ஜெட் படங்களில் எதிர்பார்ப்புக்க ு‌ ரியதாக இருந்தது நெல்லை சந்திப்பு. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்திருப்பதாக மகிழ்ச்சியில் இருக்கிறது மொத்த டீமும். படத்துக்கு பரவலான வரவேற்பு இருக்கிறது. படம் வெளியான கையோடு படம் சம்பந்தப்பட்டவர்களை சந்தித்தோம்.

FILE
தய ா‌ ரிப்பாளர் திருமல ை!

இயக்குனரான நீங்கள் தய ா‌ ரிப்பாளராக என்ன காரணம்?

நெல்லை சந்திப்பு தய ா‌ ரிப்பாளராக எனக்கு இரண்டாவது படம். முதல் படம் அகம் புறம். ஷாம் நடித்த அந்தப் படத்தை நானே இயக்கினேன். இது இரண்டாவது படம். நவீன் சொன்ன கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒரு நல்ல படத்தை நாமே தய ா‌ ரிக்கலாமே என்றுதான் இந்தப் படத்தை தய ா‌ ரித்தேன். நான் எதிர்பார்த்தது போல் படம் ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது.

இயக்குனர் நவீன ்!

உங்களைப் பற்றி சொல்லுங்கள்...?

கே.எஸ்.ரவிக்கும ா‌ ரின் முதல் படத்திலிருந்து அவ‌ரிடம் அசிஸ்டெண்டாக இருந்திருக்கேன். நெல்லை சந்திப்பு என்னோட முதல் படம். வெறுமனே காதல் படம்னு இல்லாமல் தவறான என்கவுண்டரால் பாதிக்கப்படும் குடும்பம்னு கொஞ்சம் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்தேன். அதை ரசிகர்கள் பாஸிடிவ்வாக எடுத்துக் கொண்டது உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கு.

கிளைமாக்ஸ் சிறப்பாக இருக்கு. எப்படி எடுத்தீங்க?

தசரா திருவிழா நடந்த போது கிளைமாக்ஸை ஷூட் செய்தோம். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தாங்க. மொத்தம் ஆறு கேமராக்களை யூஸ் பண்ணினோம். நாங்க எதிர்பார்த்த மாத ி‌ ரி ரசிகர்களை கிளைமாக்ஸ் கவாந்திருக்கு.

ஹீரோ ரோஹித ்!

எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது?

என்னோட கிராஜுவேஷனை முடித்துவிட்டு அப்போவோட அனிமேஷன் ஸ்டுடியோவை பார்த்துகிட்டிருந்தேன். அப்போது இயக்குனர் திருமலை ச ா‌ ரின் அறிமுகம் கிடைத்தது. அவர்தான் நவீன் சாரை இன்ட்ரடியூஸ் செய்து வைத்தார். அப்படிதான் இந்த வாய்ப்பு அமைந்தது.

வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க வந்துவிட்டீர்களா?

இல்லை. முதலில் கிஷோர் மாஸ்டர்கிட்ட டான்ஸ் கத்துகிட்டேன். அதே மாத ி‌ ரி பிரகாஷ் மாஸ்ட‌ரிடம் சண்டைப் பயிற்சி எடுத்துகிட்டேன். நம்மாலும் நடிக்க முடியும்ங்கிற நம்பிக்கை வந்த பிறகே ஷூட்டிங்கில் கலந்துகிட்டேன்.

இசையமைப்பாளர் யுகேந்திரன் வாசுதேவன ்!

நெல்லை சந்திப்பு ஆக்சன், ரொமான்ஸ், காமெடி, சென்டிமெண்ட் என்று எல்லா அம்சங்களும் நிறைந்த படம். இசையமைப்பாளருக்கு ரொம்பவே ஸ்கோப் உள்ள படம். ஒருவகையில் இதை அதிர்ஷ்டம்தான்னு சொல்லணும். படத்தின் பாடல்கள் நல்லாவே ‌ரீச் ஆகியிருக்கு. அந்தவகையில் எனக்கு இந்தப் படம் முழுத்திருப்தி.

வசனகர்த்தா, பாடலாச ி‌ ரியர் எம்.‌ஜ ி. கன்னியப்பன ்!

அடிப்படையில் நீங்கள் ஒரு பத்த ி‌ ரிகையாளர். எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது?

முன்னணி எழுத்தாளர்கள் சில‌ரிடம் நான் உதவி வசனகர்த்தாவாக இருந்திருக்கேன். நிறைய கவிதைகளும் எழுதியிருக்கேன். இந்த விவரம் இயக்குனர் நவீனுக்கும் தெ‌ரியும். நெல்லை சந்திப்பு கதையை அவர் உருவாக்கிய போதே ஒவ்வொரு காட்சியாக சொல்வார். அதுக்கேற்ப நான் வசனம் எழுதுவேன். அப்படி முழு ஸ்க ி‌ ரிப்டும் தயாரான பிறகுதான் அவர் தய ா‌ ரிப்பாள‌ரிடம் கதையைச் சொன்னார்.

ஒரு பாடலும் எழுதியிருக்கீங்க...?

இக ோ‌ ரின் கலாபக்காதலன் படத்தில் நான் எழுதியதுதான் என்னோட முதல் பாடல். அதுக்குப் பிறகு பல படங்களில் பாடல்கள் எழுதியிருக்கேன். இதிலும் களவாணின்னு தொடங்கிற பாடலை எழுதியிருக்கேன்.

ஒரு பத்த ி‌ ரிகையாளரான நீங்களே படத்தில் பத்த ி‌ ரிகையாளர்களை விமர்சிக்கிற மாத ி‌ ரி வசனம் எழுதியிருக்கிறீர்களே...?

நானும் இதுபற்றி நவீனிடம் கேட்டேன். அவர்தான், கதைக்கு ஆப்டாக இருக்கு, யாரும் தப்பு சொல்ல மாட்டாங்கன்னு சொன்னார். அதேமாத ி‌ ரி பிரஸ் ஷோ பார்த்த பத்த ி‌ ரிகைக்காரர்கள் பாராட்டினாங்களே தவிர குறை எதுவும் சொல்லலை.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments