Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிளாமர் பெ‌ரிய விஷயமில்லை – சனா கான்

கிளாமர் பெ‌ரிய விஷயமில்லை – சனா கான்
, வெள்ளி, 22 அக்டோபர் 2010 (16:03 IST)
WD
தமிழ் சினிமாவில் அழகான, திறமையான ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று ஒட்டுமொத்த திரையுலகுக்கும் தூண்டில் போடும் விதமாக பேசுகிறார் சனா கான். சிலம்பாட்டம் படத்தில் அறிமுகமானபோது இருந்த வெள்ளந்தித்தனம் இப்போது சனா கானிடம் மிஸ்ஸிங். விவகாரமான கேள்விகளுக்கும் விவரமாக பதில் சொல்கிறார் இந்த மும்பை அழகி.

நடிப்புப் பற்றி இப்போது அதிகமாக பேசுகிறீர்களே?

என்னுடைய முதலிரண்டு படங்களை பார்த்திட்டு நான் கிளாமரா நடிக்க மட்டும்தான் லாயக்குன்னு பலரும் எழுதினாங்க, பேசினாங்க. அவங்க சொன்னது தப்பு எனக்கு நடிக்கவும் தெ‌ரியுங்கிறதை என்னுடைய அடுத்தடுத்தப் படங்களில் ப்ரூப் பண்ணியிருக்கேன். என்னுடைய புதிய படங்களில் கிளாமரை மட்டும் எதிர்பார்த்து வர்றவங்க ஏமாந்துப் போவாங்க.

அது என்னென்ன படங்கள்?

இரண்டுப் படங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. முதலில் ஆயிரம் விளக்கு. அப்புறம் ராதாமோகனின் பயணம்.

இந்தப் படங்கள் பற்றி கொஞ்சம் வி‌ரிவாக சொல்ல முடியுமா?

ஆயிரம் விளக்குப் படத்தை ஹோசிமின் இயக்கியிருக்கிறார். நான் சாந்தனு ஜோடியா நடிச்சிருக்கேன். மதுரையை மையமா வச்சு இந்தப் படத்தை ஹோசிமின் சார் எடுத்திருக்கிறார். படத்தை கண்டிப்பா வெற்றிப் படமாக்கணும்ங்கிற வெறியோடு உழைச்சிருக்கார். அது படத்தில் கண்டிப்பா தெ‌ரியும். இதுவரை நான் நடித்தப் படங்களுக்கும் இதுக்கும் சின்ன ஒற்றுமைகூட இருக்காது. முற்றிலும் வித்தியாசமான படம். என்னுடைய நடிப்பு ஆர்வத்துக்கு தீனி போடுகிற நல்ல கேரக்டர். சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு படங்களில் பார்த்த சனா கானை இதில் பார்க்க முடியாது.

பயணம்...?

ராதாமோகன் சார் பயணத்தை இயக்கியிருக்கார். சிலம்பாட்டம் படத்தைப் பார்த்துதான் இந்த வாய்ப்பை எனக்கு தந்தார். என்னுடைய சினிமா கே‌ரிய‌ரில் இது மறக்க முடியாத படமாக இருக்கும்.

இந்தப் படங்களில் எல்லாம் சீனியர் நடிகர்கள் பலர் நடித்திருக்கிறார்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?

ஆயிரம் விளக்கில் சத்யரா‌ஜ், பயணம் படத்தில் நாகார்ஜுன் சார், பிரகாஷ்ரா‌ஜ் சார்னு தமிழ் சினிமாவின் சீனியர்கள் பலருடன் நடித்தது உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவம். இந்த இரண்டு படங்களிலிருந்து நான் நிறைய கத்துகிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழைத் தவிர வேறு மொழிகளில் நடிக்கிறீர்களா?

தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு தென்னிந்திய மொழி அனைத்திலும் நடிக்கிறேன்.

மொழிப் பிரச்சனை இருக்குமே?

எனக்கு அப்படி எதுவும் இதுவரையில்லை. என்னுடைய கதாபாத்திரம் எதுன்னு கேட்டு அதை ச‌ரியா உள் வாங்கி நடிக்கிறதால மொழி இதுவரை ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை.

webdunia
WD
தமிழுக்கும் மற்ற மொழிகளில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

மொழி மட்டும்தான்.

சனா கான் என்றாலே கிளாமர்தானே நினைவுக்கு வருகிறது?

நான் மும்பையைச் சேர்ந்தவள். எனக்கு கிளாமர் பெ‌ரிய விஷயமில்லை, ரொம்ப இயல்பானது. என்னைப் பொறுத்தவரை ஒருத்தர் அணிகிற ஆடையை வைத்து கிளாமர் என்று முத்திரைக் குத்தக்கூடாது. கிளாமருக்கு வேறு பல விஷயங்கள் இருப்பதாகவே நினைக்கிறேன்.

எந்த மாதி‌ி கேரக்ட‌ரில் நடிக்க ஆசை?

புதுமையான சவாலான வேடங்கள் அனைத்துமே எனக்கு விருப்பமானதுதான்.

Share this Story:

Follow Webdunia tamil