Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐட்டம் சாங் பண்ண பிடிக்கலை - சஞ்சனா சிங்

ஐட்டம் சாங் பண்ண பிடிக்கலை - சஞ்சனா சிங்
, புதன், 26 பிப்ரவரி 2014 (11:03 IST)
ரேனிகுண்டாவில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் சஞ்சனா சிங். முதல் படத்தில் அவர் காட்டிய திறமையில் அரை சதவீதத்தைக்கூட அடுத்தடுத்தப் படங்களில் காட்ட முடியவில்லை. சினிமாவின் கவர்ச்சி பிரதேசம் அவரையும் விழுங்கிவிட்டது. தனது பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். இருக்குது, செய்யுது என்று நமிதா தமிழ்தான் பேசுகிறார் சஞ்சனா. அவரின் பேட்டி.
FILE

இப்போ என்னென்ன படங்களில் நடிக்கிறீங்க?

ரெண்டாவது படம், வெற்றிச்செல்வன் அப்புறமா இப்போ விஞ்ஞானின்னு ஒரு படம். மீரா ஜாஸ்மின் ஹீரோயினா நடிச்சிருக்காங்க. நான் செகண்ட் ஹீரோயினா பண்ணியிருக்கேன். இது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன். இந்த மாதிரி படம் தமிழ்ல அவ்வளவா கிடையாது. ரொம்ப நல்ல கதை. சாங்ஸ் எல்லாம் நல்லா வந்திருக்கு. ஹீரோகூட எனக்கு ஒரு சாங் இருக்கு.

பாடல்ல என்ன ஸ்பெஷல்?

பாங்காக்ல ஷுட் பண்ணியிருக்கோம். சாங் முழுக்க அண்டர் வாட்டர் சீன், ஹெலிகாப்டர் ஷாட்னு கலா மாஸ்டர் ரொம்ப நல்லா அழகா பண்ணியிருக்காங்க. கொஞ்சம் செக்ஸியான சாங்தான். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எல்லோருக்குமே பிடிக்கும்.
webdunia
FILE

செகண்ட் ஹீரோயினா நடித்த பிறகு சின்ன கேரக்டரில் நடிக்க தயக்கமாக இல்லையா?

ஜெயம் ராஜா சாரோட புதிய படத்துல நடிச்சிருக்கேன். சின்ன கேரக்டர்தான். செகண்ட் ஹீரோயினா நடிச்சிட்டு இந்த மாதிரி சின்ன கேரக்டர்ல எப்படி நடிக்கிறதுன்னு தயக்கமா இருந்திச்சி. அப்போ பன்னீர் செல்வம் சார்தான் இது முக்கியமான ரோல் அடுத்தப் படத்துல இன்னும் நல்ல கேரக்டரா தர்றேன்னு சொல்லி என்னுடைய கேரக்டரையும் நல்லா எக்ஸ்பிளைன் பண்ணிக் கொடுத்தாங்க. ஜெயம் ராஜா சார் படத்துல நடிச்சது எனக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ். பன்னீர் செல்வம் சார்தான் ஒரு காட்ஃபாதர் மாதிரி எனக்கு எல்லாத்தையும் விளக்கிக் கொடுத்தார்.

மீகாமன் படத்தில் நடிச்சிருக்கீங்களே?

மீகாமன் படத்துல ரேனிகுண்டா மாதிரியான கேரக்டர் பண்ணியிருக்கேன். பட், ரோனிகுண்டா கொஞ்சம் வில்லேஜ் பேஸ்ல ஹோம்ம்லியா இருக்கும். இதுல கொஞ்சம் மாடர்னா ஸ்டைலிஷா இருக்கும். டைரக்டர்க்கு ஓவர் மேக்கப் பிடிக்கலை. சீன் பர்பெக்டா வரணும். சஞ்சனா நீங்க ரொம்ப ஸ்டைலிஷா இருக்கீங்க எனக்கு அப்படி வேண்டாம், ஹேர் ஸ்டைலை மாத்துங்கன்னு சொல்லி நடிக்க வச்சார். எனக்கு அது புது எக்ஸ்பீரியன்ஸா இருந்தது.
webdunia
FILE

ஹீரோயினா ஏதாவது படம் கமிட்டாகியிருக்கீங்களா?

பிரேக்கிங் நியூஸ் என்னன்னா செகண்ட் டைம் நான் ஹீரோயினா நடிக்கிறேன். புரொடியூசர் ராம் சார், டைரக்ஷன் சிவச்சந்திரன். படத்துல இரண்டு ஹீரோயின்கள் இருக்காங்க. அதில் ஒருத்தரா நான் நடிக்கிறேன். கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. கேரக்டரும் பிரமாதமா இருக்கு.

தட்டித்தடுமாறினாலும் தமிழ்ல பேசறீங்களே?

தமிழ் லாங்குவேஜ் ரொம்பப் பிடிச்சிருக்கு. க்யூட்டான லாங்வேஜ். இந்தத் தமிழ் இல்லாம பிரமாதமான தமிழ் பேசணும்னு ஆசையிருக்கு. மேனேஜர் ஜான்தான் எனக்கு தமிழ் சொல்லி தந்தார்.

எந்த மாதிரி படம் பண்ணணும்னு ஆசை?

ஆக்ஷன் படம் பண்ணணும்னு ரொம்ப ஆசையிருக்கு.
webdunia
FILE

ரேனிகுண்டா மாதிரி கேரக்டரே தொடர்ந்து பண்றீங்களே?

ரேனிகுண்டா மாதிரியான கேரக்டர் நிறைய வந்தது. மீகாமன்ல அந்த மாதிரியான கேரக்டர்னாலும் அது வித்தியாசமாக இருக்கும். எனக்கு விதவிதமான கேரக்டர் பண்ணணும்னுதான் ரொம்ப ஆசை.

ஹீரோயின் ஆயிட்டீங்க. இனி ஐட்டம் சாங் பண்ணுவீங்களா?

ரேனிகுண்டாவுக்குப் பிறகு இந்த பொண்ணு இத மாதிரியான கேரக்டர்தான் பண்ணும்னு எல்லோரும் நினைச்சிட்டாங்க. அதனால் அதை மாத்துறதுக்கு வேற வழியில்லாம சில ஐட்டம் சாங்ஸ் பண்ண வேண்டியதாச்சு. ஆனா எனக்கு ஐட்டம் சாங்ஸ் உண்மையிலேயே பிடிக்கலை. எனக்கு நல்ல கேரக்டர்... ஹீரோயின், செகண்ட் ஹீரோயின் பண்ணதான் ஆசை.

இப்போ ஹீரோயின்களே ஐட்டம் சாங் பண்றாங்களே?

ஹீரோயினா பத்து பதினைஞ்சு படம் நடிச்சிட்டு அப்புறமா ஐட்டம் சாங் பண்ண கூப்பிடுங்க வந்திடறேன். ஐட்டம் சாங்ன்னா இரண்டு மூணு நாள்ல முடிஞ்சிடும். ஹீரோயின்னா நிறைய நாள் நடிக்கலாம், உங்க திறமையை காட்டலாம்.
webdunia
FILE

உங்க ஹைட் பிளஸ்ஸா மைனஸா?

ப்ளஸ்தான். நான் அப்படியொண்ணும் பெரிய ஹைட் இல்லை. பைவ்பாயிண்ட் செவன்தான். ஹை ஹீல்னால உயரமா தெரியுது.
webdunia
FILE



Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil