Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திக்காக தமிழை புறக்கணிக்கவில்லை - காஜல் அகர்வால்

Webdunia
சனி, 3 நவம்பர் 2012 (16:38 IST)
காஜல் அகர்வால் என்பதை கான்ட்ரவர்ஸி அகர்வால் என்று மாற்றலாம். அந்தளவுக்கு சர்ச்சைகள். அத்தனையும் மீறி இவர் மீது அளப்ப‌ரிய ப ்‌ ரியம் வைத்திருக்கிறது சினிமா உலகம். முன்னணி நடிகர்களின், இயக்குனர்களின் முதல் சாய்ஸ் காஜலாகவே இருக்கிறது. தனது கே‌ரியர் மற்றும் கான்ட்ரவர்ஸிகள் குறித்து காஜல் பேசியவையிலிருந்து....

FILE
துப்பாக்கி எப்படி வந்திருக்கிறது?

ரொம்ப நன்றாகவே வந்திருக்கு. முருகதாஸ் சார் என்னிடம் படத்தின் ஒன் லைன் மட்டும்தான் சொன்னார், உடனே நடிக்க ஒத்துக்கிட்டேன். ஷூட்டிங் போவதற்கு மூன்று நாள் முன்புதான் என்னுடைய கேரக்டர் பற்றி தெ‌ரிஞ்சுகிட்டேன்.

அதுபற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

நிஷாங்கிற பப்ளி கேர்ளா வர்றேன். விஜய்யை துரத்தி துரத்தி காதலிக்கிற கேரக்டர். ‌ஜீன்ஸ், டி ஷர்ட்டுன்னு ரொம்ப மாடர்ன் கேரக்டர், ரசித்து செய்திருக்கேன். படத்தின் காதல் காட்சிகள் எல்லோருக்கும் பிடிக்கும்.

நிஷாங்கிற பெயர் உங்க தங்கையுடையது இல்லையா?

ஆமாம். அவளும் இப்போது சினிமாவில் நடிக்கிறாள். உண்மையில் அவள்தான் நான் சினிமாவுக்கு வர காரணம். மாடலிங் எல்லாம் அவளைப் பார்த்துதான் நான் செய்ய ஆரம்பித்தேன். சினிமாவில் அவள் பெ‌ரிய இடத்துக்கு வருவாள்.

இன்று முன்னணி நடிகர்கள் விரும்பும் நடிகையாக இருக்கிறீர்கள், இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பழனியில் நான் அறிமுகமான போது எனக்கு பல விஷயங்கள் தெ‌ரியாது. முன்னணி இயக்குனர்கள் படங்களில்தான் நடித்தேன், ஆனாலும் என்னுடைய கே‌ரியர் சுமாராகவே இருந்தது. சந்தமாமா அப்புறம் மஹாதீரா... இந்த இரண்டு படங்கள்தான் என்னுடைய கே‌ரியரை மாற்றி அமைத்ததுன்னு சொல்லலாம். இப்போ மாற்றான் வெளியாகியிருக்கு. தீபாவளிக்கு துப்பாக்கி. நான் விரும்பிய இடம் இப்போது கிடைச்சிருக்கு.

FILE
மாற்றான் படத்துக்காக ரஷ்ய மொழி கற்றுக் கொண்டதாக சொன்னது உண்மையா?

ரஷ்யாவில் நிறைய நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதிலும் நான் ரஷ்ய மொழிப் பேசுறதா காட்சிகள் இருக்கு. அதனால் ரஷ்ய மொழி கத்துக்கிட்டேன். காலே‌ஜ் படிக்கிறபோதே சவால்னா எனக்குப் பிடிக்கும் கடைசிவரை எடுத்த விஷயத்தில் வெற்றி பெறாமல் விடமாட்டேன். சினிமாவிலும் அப்படிதான்.

துப்பாக்கியில் விஜய்யின் கேரக்டர்...?

ஜெகதீஷ்ங்கிற துடிப்பான இளைஞனாக வர்றார். அதுக்கு மேல் படத்தை பார்த்துக்குங்க.

சுகுமார் இயக்கத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்த நீங்கள் திடீரென்று விலகியது சர்ச்சையை கிளப்பியிருக்கிறதே?

கால்ஷீட் பிரச்சனைதான் காரணம். அதை சம்பந்தப்பட்டவர்களிடம் தெ‌ளிவாக கூறியிருக்கிறேன், அவர்களும் ப ு‌ ரிந்து கொண்டார்கள். இந்தியில் நடிப்பதற்காக தெலுங்குப் படத்தை புறக்கணிப்பதாக சொல்வதெல்லாம் வெறும் கற்பனை. மூன்று தெலுங்குப் படங்களில் நான் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

அக்சய் குமார் படத்தில் நடிக்கிறீர்களே?

ஆமாம். இது என்னுடைய மூன்றாவது இந்திப் படம்.

தமிழுக்கு எப்போது திரும்ப வரப் போகிறீர்கள்?

ர ாஜ ேஷ் எம். இயக்கத்தில் கார்த்தியுடன் ஆல் இன் ஆ‌ல் அழகுராஜா படத்தில் விரைவில் நடிக்கயிருக்கிறேன்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments