சில்க் ஸ்மிதாவின் வேடத்தில் நடிப்பது உறுதியானதும், இணையத்தில் அவரின் படங்களை தேடிப் பார்த்தேன். அவருடைய மேனரிசங்களை, முகபாவனைகளை அந்தப் படங்களிலிருந்து தெரிந்து கொண்டேன்.
அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக இப்போதும் பேசிக் கொள்கிறார்கள். சிலர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள். வேறு சிலர் அது கொலை என்கிறார்கள். எதுவாக இருந்தாலும் சில்க்கின் மரணம் தமிழ் சினிமாவுக்கு பேரிழப்புதான்.
நான் தைரியமான பெண். யாரையும் டிப்பண்ட் பண்ணி இருக்க மாட்டேன். அப்படி இருந்ததும் இல்லை. சொந்தக் காலில் நிற்க எனக்குத் தொப்யும். எந்த ஆணாலும் என்னை விரக்தி அடைய வைக்க முடியாது. என்னால்தான் ஆண்களுக்கு பாதிப்பு வருமே தவிர ஆண்களால் நான் பாதிக்கப்பட மாட்டேன்.
செக்ஸ் உடன்பாடு வைத்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அது அவரவர் பர்சனல் விஷயம். ஆனால் அப்படி எதுவும் எனக்கு நடக்கவில்லை. நடக்கவும் அனுமதிக்க மாட்டேன். நான் உறுதியான பெண். யாருடனும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.
சில்க் ஸ்மிதாவின் வேடத்தில் நடித்திருக்கிறீர்கள். சில்க்கின் ஆவி உங்கள் கனவில் வந்தால்...? பயப்பட மாட்டேன். நிச்சயமாக தெரியும், சில்க்கின் ஆவி என்னை மிரட்டாது. என்னுடைய வேடத்தில் நன்றாக நடிக்கிறாய் என்று என்னை பாராட்டும், என்னுடைய வேடத்தில் நீ நடிப்பதற்காக பெருமைப்படுகிறேன் என்றுதான் சொல்லும்.