Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கயாலா... பொருள் சொல்கிறார் பாடலாசி‌ரியர் பி‌ரியன்

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2012 (16:47 IST)
FILE
அஞ்சாதே, வேலாயுதம், நான் உள்பட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் ப ி‌ ரியன். அவரது வ‌ரிகளில் அமைந்ததுதான் நான் படத்தில் ஹிட்டான மக்கயாலா பாடல். இதன் பொருள் என்ன என்பது தொடங்கி தனது தொழில், எழுதிக் கொண்டிருக்கும் படங்கள் என நீளும் ப ி‌ ரியனின் உரையாடல் உங்களுக்காக.

அது என்ன மக்கயாலா...? ஏன் இப்படியொரு ப ு‌ ரியாத வார்த்தை?

பாடலைப் பொறுத்தவரை வ‌ரிகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் ஓசையும் முக்கியம். அதற்காக போட்டதுதான் மக்கயாலா. நமது பாடல் மரபில் அன்பே உயிரே என்று ஆயிரம் வார்த்தைகள் இருக்கலாம், ஆனால் மக்கயாலா என்று ஒரேயொரு பாடல்தான் இருக்கிறது. நண்பர்கள் சேர்ந்து கொண்டாடும் ஒரு பாடல் என்றதும் ஏலே மக்கா என்ற வார்த்தையை எழுதினேன். அதைதான் விஜய் ஆண்டனி சார் மக்கயாலா என்று மாற்றினார்.

இப்படியொரு பாடல் தேவையா?

கண்டிப்பாக. குழந்தைகள் இந்தப் பாடல்களைதான் அதிகம் விரும்பி கேட்கிறாங்க. மன்மத ராசா முதல் கொலவெறி வரை குழந்தைகளுக்குப் பிடித்த பாடல்கள்தான் அதிகம் ஹிட்டாகியிருக்கு. மக்கயாலாவும் குழந்தைகளுக்கு ரொம்பப் பிடித்த பாடல்தான்.

எப்படி சினிமாவுக்கு வந்தீங்க?

எனக்கு சொந்த ஊர் திருச்சி. தமிழ் மீது சின்ன வயசிலேயே ஆர்வம் அதிகம். சென்னை வந்து முதலில் சில மொழிமாற்றுப் படங்களில்தான் பாடல்கள் எழுதினேன். அப்புறம் படிப்படியாக நேரடி தமிழ்ப் படத்தில் பாடல்கள் எழுத வாய்ப்பு கிடைத்து முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் படத்தில் பாடல்கள் எழுதிட்டு வருகிறேன்.

FILE
அதற்கான பிரேக் எப்படி கிடைத்தது?

மிஷ்கின் சாரையும், விஜய் ஆண்டனி சாரையும் சந்தித்ததுதான் என்னோட கே‌ரிய‌ரில் முக்கியமான பிரேக் என்று சொல்லலாம். மிஷ்கின் ச ா‌ ரின் அஞ்சாதேயிலும், விஜய் ஆண்டனி ச ா‌ ரின் காதலில் விழுந்தேன் படத்திலும் பாடல்கள் எழுதினேன்.

விஜய் ஆண்டனி அவ்வளவு எளிதில் வாய்ப்பு தருவதில்லையே...?

தமிழ் இலக்கணம் தெ‌ரிந்தால்தான் வாய்ப்பே தருவார். அவரை சந்தித்தபோது பாடலுக்கான சந்தத்தை தந்து எழுதச் சொன்னார். ஐந்து நிமிடத்தில் ஐந்து பல்லவிகள் எழுதித் தந்தேன். அது பிடித்துதான் வாய்ப்பு தந்தார்.

இப்போது என்னென்ன படங்களில் பாடல் எழுதி வருகிறீர்கள்?

விரைவில் வெளியாகவிருக்கிற வெயிலோடு விளையாடு படத்தில் எழுதியிருக்கேன். யுவன் ஷங்கர் ராஜா பாடியிருக்கார். கார்த்திக் ராஜ ா இசையில் சில பாடல்கள் எழுதியிருக்கேன். அது தவிர பத்துப் படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறேன்.

அதிக பாடலாச ி‌ ரியர்கள் இருப்பதால் போட்டி அதிகமிருக்குமே?

போட்டியும், போராட்டமும் வாழ்க்கையில் இயல்புதானே. நிறைய பேர் பாடல்கள் எழுதுவது நல்ல விஷயம்தான். நல்ல பாடல்கள் அப்போதுதான் உருவாகும்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments