Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட இலங்கை மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்க அரசு உறுதி

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2016 (22:59 IST)
இலங்கையின் வடக்குப் பகுதி மீனவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை முல்லைத்தீவில் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அளித்துள்ளார்.
முல்லைத்தீவில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினருடன் கலந்துரையாடி ஆராய்ந்ததன் பின்னர் அதற்கு தீர்வு காணும் நோக்கில் குழு ஒன்றையும் அவர் அமைத்துள்ளார்.
 
அரசாங்க அனுமதி பெற்ற வெளிமாவட்ட மீனவர்கள் மாத்திரமல்லாமல் அத்துமீறி வருபவர்களும் அங்கு வந்து தங்கியிருந்து மீன் பிடியில் ஈடுபடுவதனால் தாம் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கூறியுள்ளனர்.
 
மீனவர்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்த அமைச்சர் படையதிகரிரகளிடமும் அரச அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்டதுடன், சட்டவிரோத மீன்பிடியையும், அனுமதியின்றி மேற்கொள்ளப்படுகின்ற மீன்பிடியையும் அனுமதிக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பித்துள்ளார் என மீனவர் சங்கத்தினர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.
 
வெளிமாவட்ட மீனவர்கள் மட்டுமன்றி, இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி இந்திய மீனவர்கள் நுழைந்து தமது வளங்களைச் சுரண்டி வாழ்வாதாரங்களை பாதிப்பதாக வட இலங்கை மீனவர்கள் பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

Show comments