Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வறுமையில் வில், அம்பை விற்ற முன்னாள் வில்வித்தை வீராங்கனை

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2012 (17:35 IST)
FILE
2008 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் வில்வித்தை மகளிர் பிர்வில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரான்சியைச் சேர்ந்த நிஷா ராணி தத்தா தனது குடும்பத்தை வறுமையிலிருந்து காப்பற்ற தனது வில் மற்றும் அம்பை விற்றுள்ள அவலம் நடந்துள்ளது.

வெள்ளிப்பதக்கம் வென்று தந்த தனது வில் மற்றும் அம்பை அவர் ரூ.50,000த்திற்கு விற்றுள்ளார்.

தன்னுடைய குடும்பச் சூழ்நிலை காரணமாக விற்க நேரிட்டதாகவும், தனது வில் அம்பை மணிப்பூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

13 வயதில் வில்வித்தையை தொடங்கினார் நிஷா ராணி தத்தா, தான் ஒரு கிரிக்கெட் வீரராக இல்லாத காரணத்தினால் இந்த விளையாட்டைத் தொடர்ந்து தன்னால் தக்கவைக்க முடியவில்லை என்று கூறிய அவர் 2005ஆம் ஆண்டு டாடா வில்வித்தை கழகத்தில் சேர்ந்தார். அங்கு மாத உதவித் தொகையாக ரூ.500 முதல் 600 வரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது போதவில்லை. இருப்பினும் அவர் தனது வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி இந்த சிறிய தொகையில் பாதியை சேமித்துள்ளார்.

இவரது தந்தை ஒரு ஏழை விவசாயி,நிலமும் அவ்வளவாக இல்லை, விதைகளை வாங்க போதிய பணமும் இல்லை. முழுச்சாப்பாட்டிற்கான பணம் குடும்பத்திற்கு கிடைக்காத அவல நிலை நீடித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு பெங்களூரில் ஒரு அறக்கட்டளையில் சேர்ந்து பணியாற்றியதன் மூலம் ரூ.3000 ஊதியம் பெற்று வந்தார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு வருமானமும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.

இந்த வில் அம்பின் விலை ரூ.3 அல்லது ரூ.4 லட்சமாக இருக்கும், ஆனால் வறுமை காரணமாக குறைந்த விலைக்கு விற்றுள்ளார் நிஷா ராணி தத்தா.

ஆனால் ஜார்கண்ட் துணை முதல்வர் சுதேஷ் மாத்தோ ரூ.25,000 உதவி புரிந்துள்ளார், மேலும் அவருக்கு நினைவுப்பரிசு ஒன்றையும் அளித்து அவரது படிப்பைத் தொடருமாறும் முழு உதவி புரிவதாகவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு 17 அல்லது 18 வயது கிரிக்கெட் வீரர் கோடிகோடியாக பணம் குவிக்கும் இந்த நாட்டில் இதுபோன்ற அவல நிலையும் இருப்பது இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலையையும் விளையாட்டு அமைப்பு, நிர்வாக நிலைகளையும், அரசியல் சாக்கடைத் தன்மைகளையும் மேலும் ஆழமாக அறிவுத்துகிறது.

News Summary: News Summary: Former National Archer Nisha Rani Dutta sold her Bow to meet her family's poverty.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவுக்கும் ரோஹித்துக்கும் நன்றி… மீண்டும் இந்திய ரசிகர்களை ‘சைலன்ஸ்’ ஆக்கிய கம்மின்ஸ்!

கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

‘எங்களுக்கு என்ன கிரிக்கெட்டா தெரியும்?.. நாங்க டிவில பேசுறவங்கதானே?’- ஊமைக் குத்தாய் குத்திய கவாஸ்கர்!

மாற்றங்கள் நன்மைக்கே…இந்திய அணி குறித்து கம்பீர் கருத்து!

மூன்றாம் நாளில் இரு அணி வீரர்களும் பிங்க் நிற ஜெர்ஸியில் விளையாடக் காரணம் என்ன?

Show comments