Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோழிகளில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்?

Webdunia
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இரண்டு ரஷ்ய வீராங்கனைகளான தினாரா சஃபீனாவும், ஸ்வெட்லானா குஸ்னெட்சோவாவும் மோதுகின்றனர். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபுல்கோவாவை 6- 3, 6- 3 என்ற செட்களில் எளிதில் தினாரா சஃபீனா வீழ்த்த குஸ்னெட்சோவா, ஆஸ்ட்ரேலிய வீராங்கனை சமந்தா ஸ்டோசரை 6- 4, 6- 7, 6- 3 என்ற செட்களில் வீழ்த்த போராடினார்.

2004 ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் மிஸ்கினாவும், எலெனா டீமென்டீவாவும் மோதிய பிறகு தற்போது இரண்டாவது முறையாக் இரண்டு ரஷ்ய வீராங்கனைகள் பிரெஞ்ச் ஓபன் இறுதியில் மோதுகின்றனர்.

இது வரை ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் கூட வென்றிராத சஃபீனா தற்போது உலகத் தரவரிசையில் முதலிடம் வகிப்பது குறித்து விமர்சகர்கள் பலர் ஒன்றாம் நிலைக்கு இவர் தகுதியற்றவர் என்று கூறி வந்துள்ளனர். எனவே இந்த முறை அவர் பட்டம் வெல்வதில் தீவிரம் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஸ்னெட்சோவா 2006ஆம் ஆண்டு ரோலாண்ட் கேரோஸ் இறுதியில் ஜஸ்டின் ஹெனினிடம் இறுதியில் தோல்வி தழுவினார். ஆனால் சஃபீனா போல் அல்லாமல் குஸ்னெட்சோவா 2004ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஒன்றை வென்ற பெருமையை பெற்றவர்.

நெருங்கிய தோழிகளில் யார் யாரை வீழ்த்துவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

Show comments