Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்விக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் மீது விமர்சனம் - விளக்கம் அளித்த கோலி!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (08:16 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையைக் கைப்பற்றியது.

 
5 நாள் ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக 6ஆவது நாளான நேற்று ரிசர்வ் நாளில் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்று வந்த இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிப்பெற்று கோப்பையை கைப்பற்றியது. 
 
இந்நிலையில் தோல்விக்கு பின்னர் இந்திய அணில் சுழற்பந்து வீச்சாளர்களை சேர்த்தது தவறு என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பின்வருமாறு பேசினார், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் சீதோஷன நிலைக்கு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் தேவைப்படுவார்கள். 
 
ஆனால் இப்போதிருக்கும் இந்திய அணியை வைத்து நாங்கள் ஏற்கெனவே பல்வேறு நாடுகளுக்கு எதிராக வெற்றிப்பெற்று இருக்கிறோம். இதனால் எங்கள் பேட்டிங்கின் ஆழமும் அதிகரித்து இருக்கிறது. அதனால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்பது சரியான முடிவுதான். போட்டியில் இன்னும் நிறைய நேரம் இருந்திருந்தால் சுழற்பந்துவீச்சாளர்கள் இன்னும் நிறைய விக்கெட்டுகளை எடுத்திருப்பார்கள் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான்கு சீனியர்களில் இரண்டு பேருக்குக் குறி… பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கடைசியா?

கே எல் ராகுலே மோசம்… கோலியும் ரோஹித்தும் அவர விட மோசம்… இது என்னப்பா புது கணக்கா இருக்கே!

இந்திய அணியில் கம்பீரின் அதிகாரத்தைக் குறைக்க முடிவு?

பிசிசிஐ செயலாளராக பொறுப்பேற்கவுள்ள ரோஹன் ஜெட்லி?

தோனியோட விளையாட ஆசை.. ஆனா அது நடக்கவே இல்ல! - மனம் திறந்த டேல் ஸ்டெயின்!

அடுத்த கட்டுரையில்
Show comments