Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..!

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (10:39 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணி சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த போட்டிக்கு பேட் கம்மிங்ஸ் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் பின்வருமாறு: கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் , மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

ஆஸ்திரேலிய அணியின் மார்ஷ்  நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணியில் இணைந்து உள்ளார் என்பதும் அவரது ஃபார்ம் ம் தற்போது அபாரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments