Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா, ஸ்ரீகாந்த்

Webdunia
திங்கள், 30 மார்ச் 2015 (15:52 IST)
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நெவாலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்தும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
‘சன்ரைஸ்’ இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால், தாய்லாந்து வீராங்கனை ராட்சானோக்கை எதிர்த்து விளையாடினார்.
 
உலக தர வரிசையில் நேற்று முன்தினம் நம்பர் ஒன் இடத்தை பிடித்து வரலாறு படைத்த சாய்னாவின் அபாரமான ஆட்டத்துக்கு முன்னால் ராட்சானோக் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினார்.
 
49 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா நெவால் 21–16, 21–14 என்ற நேர்செட்டில் ராட்சானோக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
 
25 வயதான சாய்னா நெவால் இந்திய ஓபன் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பெருமைக்குரிய சாய்னா வென்ற 15–வது சர்வதேச பட்டம் இதுவாகும்.
 
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 18–21, 21–13, 21–12 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் விக்டோர் ஆக்ஸ்செனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments