Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோப்பை கால்பந்தில் சாதனை படைக்குமா இந்தியா? – தகுதி சுற்றில் இன்று மோதல்

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (13:41 IST)
2020 ஆம் ஆண்டு கத்தாரில் நடக்க இருக்கும் 22வது உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றில் இன்று இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. 40 நாடுகளின் அணிகள் பங்குபெறும் இந்த போட்டிகள் மூன்று சுற்றுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிபெறும் அணிகள் தேர்வு செய்யப்பட்டு 3வது சுற்றுக்கு 12 அணிகள் தகுதி பெறும்.

முதலாவது சுற்றில் விளையாடி வரும் இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஓமனிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. கத்தாருடன் ஆடிய ஆட்டத்தில் டிரா ஆனதால் இதுவரை இந்தியாவுக்கு ஒரு வெற்றிக்கூட கிடைக்கவில்லை. வங்கதேச அணியும் இதுவரை இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுமே இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

இன்றைய ஆட்டத்தில் இந்தியா வங்கதேசத்தை வென்று தனது வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

எடு எடு… பாக்கெட்ல இன்னைக்கு என்ன எழுதி வச்சிருக்க… அபிஷேக் ஷர்மாவிடம் ஜாலி பண்ணி SKY!

நாம ஜெயிச்சாலும் CSK வளரவிடக் கூடாது! மும்பை செய்த வன்ம வேலை? - கடுப்பான CSK ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments