Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக பேட்மிண்டன் இறுதிப்போட்டி - இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வி

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (09:47 IST)
உலக பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் போராடி தோல்வியடைந்துள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து காலிறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்,
 
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வந்தது.
 
காலிறுதிச் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நோசொமி ஒக்குஹாராவை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை சிந்து அபாரமாக வெற்றி பெற்று அரையிறுதி சுற்றிற்கு தகுதிபெற்றார்.
பின் அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகேனா யமகுச்சியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.
 
இந்நிலையில் நேற்றைய இறுதிச்சுற்றில் பி.வி.சிந்து–கரோலினா மரின் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். ஆட்டம் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார் கரோலினா.
 
சிந்து கடுமையாக முயற்சி செய்தும் 21-19, 21-10 என்ற கணக்கில் கரோலினா சிந்துவை வீழ்த்தினார். இதன்மூலம் கரோலினார் தங்கப்பதக்கம் வென்று உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். 
இந்திய வீராங்கனை சிந்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது முறையாக வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை சிந்து அடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மண்ணில் விளையாடுவதால் அழுத்தம் இருக்கும்… ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் பதில்!

முதல் டெஸ்ட்டில் நிதீஷ் குமாருக்கு வாய்ப்பு… பவுலிங் பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 3-வது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா..!

கோலியைக் கொண்டாடும் ஆஸி ஊடகங்கள்.. ஆனால் உளவியல் ரீதியாகத் தாக்கும் ஆஸி வீரர்கள்…!

அவர் இருந்திருந்தா நாங்க எல்லாம் களைப்பாகிவிடுவோம்… இந்திய வீரர் குறித்து நிம்மதி பெருமூச்சு விட்ட ஆஸி பவுலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments