Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து: சாம்பியன் மகுடத்தை வென்று அமெரிக்கா அசத்தல்

Webdunia
திங்கள், 6 ஜூலை 2015 (09:24 IST)
பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி சாம்பியன் மகுடத்தை வென்றுள்ளது அமெரிக்கா.
 
கனடாவில் நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா - ஜப்பான் அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அமெரிக்க வீராங்கனை லாய்ட் அடுத்தடுத்து கோல் அடித்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.
மேலும் ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்தில் ஹோலிடேவும், 16 ஆவது நிமிடத்தில் லாய்ட்வும் கோல் அடித்து அசத்தினர். இவர்களுக்கு முன்னாள் ஜப்பான் வீராங்கனைகளின் ஆட்டம் பலனளிக்கவில்லை. எனினும் ஆட்டத்தின் 27 ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணி ஒரு கோல் அடித்தது.
 
பின்னர் ஆட்டத்தின் 52 ஆவது நிமிடத்தில் அமெரிக்க அணி ஜப்பானுக்கு சேம்சைடு கோல் அடித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்க வீராங்கனை ஹீத் கோல் அடித்து அசத்தினார். இறுதியில் அமெரிக்க அணி 5 - 2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வென்று சாம்பியன் மகுடத்தை தட்டி சென்றது.

உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன்.. நான் இருக்கேன்! காலில் விழுந்த ரசிகருக்கு தோனி கொடுத்த வாக்குறுதி!

கோலி மட்டும் எங்க அணியில் இருந்திருந்தா நாங்க ஒரு கோப்பைய கூட மிஸ் பண்ணிருக்க மாட்டோம்… ஜாம்பவான் வீரர் கருத்து!

“இப்போது நான் வாங்கும் சம்பளமே நான் எதிர்பார்க்காதது…”… ரிங்கு சிங் நெகிழ்ச்சி!

சர்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள், வீராங்கனைகள்!

ப்ளாங்க் செக்லாம் வேணாம்.. பிசிசிஐ பயிற்சியாளராகும் கவுதம் கம்பீர்?

Show comments