Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

Siva
வெள்ளி, 20 டிசம்பர் 2024 (07:49 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகள் இடையே டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியதை அடுத்து, இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 47 பந்துகளில் 77 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார்.

இதனை அடுத்து, 218 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏற்கனவே, முதல் டி20 போட்டியை இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது டி20 போட்டியில் மட்டும் மேற்கிந்திய தீவுகள் அணி வென்ற நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 22ஆம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல்முறையாக ரியல் மாட்ரிட் - பார்சிலோனா கால்பந்து போட்டி: ரசிகர்கள் மகிழ்ச்சி

ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை… ஆனாலும் பாகிஸ்தான் அணிக்கு இவ்வளவு பெரிய தொகை பரிசா?

ஐபிஎல் பயிற்சியைத் தொடங்கிய எம் எஸ் தோனி… வைரலாகும் புகைப்படம்!

ஆசியக் கோப்பை தொடர் எப்போது? எங்கு? வெளியான தகவல்!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆகிறாரா ஷுப்மன் கில்?... ரோஹித் ஷர்மாவுக்கு என்ன பிரச்சனை?

அடுத்த கட்டுரையில்
Show comments