Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்காவது டெஸ்ட் போட்டி… காயத்தால் ஆஸி வீரர் விலகல்!

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (10:35 IST)
ஆஸி தொடக்க ஆட்டக்காரர் பூக்கோவ்ஸ்கி நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரெலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நான்காவது போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இந்த தொடரின் போதும் அதிகளவிலான வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியிருப்பது அணித்தேர்வில் மிகப்பெரிய சவாலாக அமைந்ததுள்ளது. இந்திய வீரர்கள் கே எல் ராகுல், பூம்ரா, விஹாரி மற்றும் ஜடேஜா ஆகியோர் காயத்தால் விளையாட முடியாத சூழலில் உள்ளனர். இதற்கு முன்னரே உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோரும் காயமடைந்தனர். அதே போல அஸ்திரேலிய அணியில் வார்னர், பேட்டின்ஸன் போன்ற வீரர்கள் காயம் காரணமாக முழுத்தொடரையும் விளையாட முடியவில்லை.

இந்நிலையில் இப்போது ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரரான வில் புகோவ்ஸ்கியும் இப்போது காயம் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பீல்ட் செய்யும் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் அவர் விலகியுள்ளார். இதனால் ஆஸி அணிக்கும் பின்னடைவாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

'டே பாதர் என்னடா இதெல்லாம்'… தந்தையை ஜாலியாகக் கலாய்த்த அஸ்வின்!

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments