ஹோப், சேஸ் அபார பேட்டிங்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி மே.இ.தீவுகள்

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (22:05 IST)
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டி தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்கள் எடுத்தது. ரஹ்மத் ஷா 67 ரன்களும் இக்ரம் அலிகில் 58 ரன்களும் எடுத்தனர்
 
இதனை அடுத்து 195 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 46.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேஸ் மிக அபாரமாக விளையாடி 94 ரன்களும் ஹோப் 77 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சேஸ் இன்றைய போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் 
 
இதனை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டி லக்னோவில் வரும் 9ஆம் தேதி நடைபெறும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

அடுத்த கட்டுரையில்
Show comments