Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார்னருக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக இறங்க போவது யார்? ஆரோன் பின்ச் பதில்!

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:01 IST)
மூன்றாவது ஒருநாள் போட்டியில் வார்னருக்கு பதில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கபோகும் வீரர் யார் என்ற கேள்விக்கு கேப்டன் பின்ச் பதிலளித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வென்று தொடரை வென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வார்னரின் ஓபனிங் ஆட்டம் இரண்டு போட்டிகளிலும் அபாரமாக இருந்தது என்றும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வார்னர் காயம் காரணமாக மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் வார்னருக்கு பதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த பின்ச் ‘ தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க எங்களிடம் வீரர்கள் உள்ளனர். எங்களிடம் மேத்யு வேட், அலெக்ஸ் கேரி மற்றும் மார்னஸ் லபுஷேன் ஆகிய மூவர் உள்ளனர். இவர்களில் யாராவது ஒருவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் பங்குபெறும் ரோஹித் ஷர்மா?

ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கு தோல் புற்றுநோயா? சிகிச்சைக்குப் பின் பதிவு!

ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தடை… 200 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments