Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித்துக்கு வழிவிடப் போவது யார்? இந்திய அணியில் அடுத்த குழப்பம்!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (11:42 IST)
இந்திய அணியில் ரோஹித் ஷர்மா இணைய வுள்ள நிலையில் யாரை அணியில் இருந்து நீக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா கடந்த சில வாரங்களாக காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அவர் முழு உடல் தகுதி பெற்று மீண்டும் அணியில் இணைவது அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற அவர் 14 நாட்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் இன்று தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் அணியுடன் இணைந்து உள்ளார்.

அடுத்து சிட்னியில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் இடம்பிடிப்பார் என நம்பப் படுகிறது. சமீப காலமாக அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். இதனால் அவர் இறங்கும் பட்சத்தில் மயங்க் அகர்வாலை நீக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. கடந்த இரு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பளிக்க பட்டும் அவர் சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்தவில்லை. ஆனால் மற்றொரு வீரரான ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா சாதனை முறியடிப்பு.. ஐக்கிய அரபு அமீரக கேப்டன் சிக்ஸர் மழை..!

பும்ரா போல முதுகுவலிப் பிரச்சனை… ஆஷஸ் தொடரில் கம்மின்ஸ் விளையாடுவாரா?

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் எடுத்த அதிரடி முடிவு.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

யார் பந்து போட்டாலும் சிக்ஸ அடிக்கணும்னு நெனைப்பேன்… ரோஹித் ஷர்மா கெத்து!

மீண்டும் இந்திய அணியுடன் இணையும் தோனி… இந்த முறையாவது பலன் கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments