Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது ஒருநாள் போட்டி: 190 டார்கெட்டை அடைய முடியாமல் இந்தியா தோல்வி

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (04:02 IST)
மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டி ரத்தான நிலையில் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.



 
 
இந்த நிலையில் நேற்று ஆண்டிகுவாவில் 4வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 189 ரன்கள் எடுத்தது.
 
190 என்ற எளிய இலக்கை இந்தியா விரைவில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவிச்சில் அனல் பறந்ததால் இந்திய அணி 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. ரஹானே 60 ரன்களும், தோனி 54 ரன்களும் எடுக்க மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் ஒன்றை இலக்க எண் ரன்களில் அவுட் ஆகினர்.
 
5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகளின் ஹோல்டர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments