Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வெற்றி !

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (21:24 IST)
உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.
உலககோப்பை போட்டிகள் இந்த முறை கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்தில் நடைபெறுகின்றன. நேற்று தொடங்கிய முதல் போட்டியில் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதனை அடுத்து இரண்டாம் நாளான இன்று பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டித் தொடங்கியுள்ளது.
 
டிரண்ட் பிரிட்ஜ் , நாட்டிங்காமில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் கேப்டன் ஹோல்டர் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்துள்ளார்.  வலிமைமிக்க வெஸ்ட் இண்டீஸ் அணி பயிற்சி ஆட்டங்களில் அதிரடியாக விளையாடி கலக்கியுள்ளது. பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸை சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை உலகக்கோப்பையில் இரு அணிகளுக்கும் இடையில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 7 போட்டிகளிலும் பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வென்றுள்ளது.
 
வெஸ்ட் இண்டீஸ் அணி :-
 
கெய்ல், ஷாய் ஹோப்,டேரன் பிராவோ, ஷிம்ரான் ஹெட்மைர், நிக்கோலஸ் பூரன், அந்த்ரே ரஸ்ஸல், ஜேசன் ஹோல்டர் (கே), கார்லஸ் பிராத்வெய்ட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் காட்ரெல், ஓஷனே தாமஸ்
 
பாகிஸ்தான் அணி :-
 
இனாம் உல் ஹக், பக்தர் ஸமன், பாபர் அஸாம், ஹரிஸ் சோஹைல், முகமது ஹபீஸ், சர்பராஸ் அகமது (கே), இமாட் வஸிம், ஷதாப் கான், ஹசன் அலி, முகமது அமீர், வஹாப் ரியாஸ்
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸின் பந்துகளை சமாளிக்க முடியாமல் திணறியது பாகிஸ்தான் அணி. 21. 4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி வீரர்கள் 105 ரன்களின் சுருண்டனர். ஜபான் , பாபர் ஆகியோர் தலா 2 ரன்கள் எடுத்தனர். மற்றொரு வீரர் வ்வகாப் ரியாஸ் 18 ரன்கள் எடுத்தார்.
 
இதனையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13. 4 ஓவர்களில் இந்த சொற்ப இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
 
துவக்க ஆட்டக்காரர் கெயில் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த பூரன் - ஹெட்மயர் ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இதில் 4 விக்கெட் வீழ்த்திய தாம்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments