Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இன்னிங்ஸ் தோல்வியா? மே.இ.தீவுகள் அணி திணறல்!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (11:03 IST)
மீண்டும் இன்னிங்ஸ் தோல்வியா? மே.இ.தீவுகள் அணி திணறல்!
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது என்பதும் 2வது டெஸ்ட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. எனவே ஏற்கனவே இந்த தொடரை அந்த அணி வென்றுவிட்டது 
 
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மீண்டும் இன்னிங்ஸ் வெற்றி பெறும் நிலையில் நியூசிலாந்து அணி உள்ளது. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது 460 ரன்கள் எடுத்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ ஆனது
 
இதனையடுத்து அந்த அணி தற்போது 2வது இன்னிங்சை விளையாடி வரும் நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 85 ரன்கள் பின் தங்கியுள்ளதால் அதற்குள் 4 விக்கெட்டுகள் விழுந்துவிட்டால் மீண்டும் இன்னிங்ஸ் தோல்வி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகின்றனர் என்பதும், மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் 60 ரன்களுடன் களத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments