Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'திரும்ப திரும்ப எங்களை கூப்பிட வேண்டும்’ - இந்தியாவிற்கு வங்கதேசம் எச்சரிக்கை

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2017 (15:56 IST)
நாங்கள் விளையாடும் விதத்தை பார்த்து. இந்தியா எங்களை மீண்டும், மீண்டும் விளையாட அழைக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம் என்று வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்துள்ளார்.


 

வங்கதேச கிரிக்கெட் அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவுக்கு வந்துள்ளது. அந்த அணி வருகின்ற 9ஆம் தேதி, இந்தியாவுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் மோதுகிறது.

இப்போட்டியில் விளையாடும் வங்கதேச அணி வீரர்கள் ஹைதராபாத்தை வந்தடைந்தனர். டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக வங்கதேச அணி இந்திய ‘ஏ’ அணியுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் இன்றுவிளையாடுகிறார்கள்.

இதற்கான பயிற்சியில் ஈடுபட்ட வங்கதேச அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹீம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பல ஆண்டுகள் கழித்து இந்தியா வந்துள்ள நாங்கள் விளையாடும் விதத்தை பார்த்து. இந்தியா எங்களை மீண்டும், மீண்டும் விளையாட அழைக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

இந்தியா வந்துள்ள எங்கள் அணி வலிமையானது. சமீபத்தைய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் தங்களது திறமையை தக்க வைத்து கொள்வார்கள் என நம்புகிறேன். இந்தியா வலுவான அணியாகும். சொந்த மண்ணில் அவர்கள் எப்போதுமே சிறப்பாக விளையாடுவார்கள்.

இந்தியாவுக்கு எதிராக 5 நாட்களும் விளையாடவே விரும்புகிறோம். வெறும் 2 அல்லது 3 நாளில் போட்டியை முடிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.. சொந்த மண்ணில் தோல்வியடைந்த நியூசிலாந்து..!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments