Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைக்க கூடாது: ஹர்பஜன் சிங்

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (15:04 IST)
இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சரியாக செயல்படாததை தொடர்ந்து ஹர்பஜன் சிங், ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
 
முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படு மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் பலரும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஹர்பஜன் சிங் ஆல்ரவுண்டர் என்ற அழைக்கப்படும் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
பாண்டியா பேட்ஸ்மேனாக அதிகம் ரன்களை குவிக்கவில்லை. அவரது பந்துவீச்சின் மீதும் கேப்டனுக்கு நம்பிக்கை இருப்பது போல் தெரியவில்லை. அவர் இதே நிலையில் தொடர்ந்து பந்து வீசினால் வருங்காலத்தில் அணியில் தேர்வாவது கடினம்.
 
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் போல் சிறப்பான ஆட்டத்தை நாம் பாண்டியாவிடம் எதிர்பார்த்தோம். ஆனால், அவர் ஓவர் நைட்டில் கபில் தேவ் ஆக முடியவில்லை. எனவே, அவரை நாம் ஆல்ரவுண்டர் என அழைப்பதை இனி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments