Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஒன்றும் முட்டாள் இல்லை… வாசிம் அக்ரம் விளாசல்!

Webdunia
சனி, 29 மே 2021 (11:23 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் கௌரவப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்தான் வாரியத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள வாசிம் அக்ரம் ‘நான் ஒன்றும் முட்டாள் இல்லை. நானும் சமூகவலைதளங்களையும், செய்தித்தாள்களையும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். வீரர்கள் எதுவும் சந்தேமிருந்தால் என்னிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்கின்றனர். வீரர்கள் பயிற்சியாளர்களை அவமதிப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். பயிற்சியாளர்களா களத்தில் இறங்கி விளையாட முடியும். தோல்வி அடைந்தால் பயிற்சியாளர் எப்படி பொறுப்பாக முடியும்? பயிற்சியாளர்களை அவமதிக்கும் செயலை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நடத்த எனக்கு நேரமில்லை, எனக்கு கவுரவப் பதவி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.’ எனக் கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

ப்ளே ஆஃபில் இருந்து வெளியேறப் போவது யார்? டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் எடுத்த முடிவு!

“டிவிட்டரில் எந்த நல்லதும் நடந்ததில்லை… வீண் சர்ச்சைதான்” – சமுக ஊடகங்கள் குறித்து தோனி!

மாநில அளவிலான தாங் டா விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

ஐபிஎல் தொடரின் போது சர்வதேச போட்டிகள் வைக்கக் கூடாது… ஜோஸ் பட்லர் கருத்து!

கோலியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்… பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த ஆர் சி பி!

அடுத்த கட்டுரையில்
Show comments