Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சொதப்பிய விராத் கோஹ்லி: 3 ரன்களில் அவுட்!

Webdunia
சனி, 29 பிப்ரவரி 2020 (07:32 IST)
மீண்டும் சொதப்பிய விராத் கோஹ்லி:
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிபிஷா 54 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் 7 ரன்களில் அவுட்டானார் 
 
இதனை அடுத்து புஜாரா களம் இறங்கி 15 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி களமிறங்கினார் கடந்த சில போட்டிகளில் விராட் கோலி அதிக ரன்கள் எடுக்கவில்லை என்பதால் இந்த போட்டியிலாவது அவர் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் எதிர்பாராதவிதமாக செளதி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் 3 ரன்களில் விராத் அவுட் ஆகியது அனைவரையும் அதிருதிக்கு உள்ளாக்கியது 
இந்த நிலையில் உணவு இடைவேளை வரை இந்திய அணி 25 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி உள்ளது இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி தொடரை சமன் படுத்த முடியும் என்பதும், அல்லது இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments