Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலி அனுஷ்காவுடன் என்ன உறவு? எரிச்சல் அடைந்த விராட் கோலி

காதலி அனுஷ்காவுடன் என்ன உறவு? எரிச்சல் அடைந்த விராட் கோலி
, வியாழன், 18 பிப்ரவரி 2016 (11:13 IST)
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தற்போது பிரிந்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது.


 
 
இதற்கு காரணம், காதலர் தினத்தில் காதலி அனுஷ்காவுடன் அதிகமான நேரத்தை செலவிட விரும்பிய விராட் கோஹ்லி, இலங்கைக்கு எதிரான இருபது ஓவர் போட்டியில் விளையாடாமல் ஓய்வெடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அனுஷ்கா ஷர்மாவோ விராட் கோஹ்லியிடம் சொல்லாமல் சுல்தான் படத்தில் நடிக்கவும், வேறு சில பணிகளுக்கும் ஒப்பந்தம் கொடுத்துள்ளார்.
 
இதனால் கடுப்பான விராட் கோலி அனுஷ்காவிடம் அதை மாற்றியமைக்கு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அனுஷ்காவோ அந்த பணிகளை மாற்றியமைக்கவோ, நிராகரிக்கவோ தயாராக இல்லை என்று தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், விராட் கோலியிடம் செய்தியாளர்கள் அனுஷ்கா சர்மா பற்றி கேள்வி எழுப்பினாலே அவர் எரிச்சல் அடைந்து விடுகிறார். 
 
இந்நிலையில், மும்பையில் நேற்று பிரபல கைக்கெடிகார நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விராட் கோலியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அப்போது அவரிடம், ‘காதல் உறவு’ பற்றி கேட்டதும் எரிச்சல் அடைந்தார்.

நேரடியாக பதில் அளிப்பதை தவிர்த்த அவர் என்ன காதல் உறவு? யாருடன்? நான் காதல் உறவு குறித்து ஆலோசனை வழங்குபவர் அல்ல. எனவே இந்த கேள்வியை என்னிடம் கேட்காதீர். அதற்கான நிபுணரிடம் போய் கேளுங்கள்’ என்று எரிச்சல் அடைந்து செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார். அப்போது, அந்த இடத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil