Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாருமே அந்த தோல்விக்குப் பின் நம்மை நம்பவில்லை – வெற்றிக்கு பிறகு கேப்டன் கோலி பதிவு!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (16:16 IST)
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இந்தியாவில் இருக்கும் கேப்டன் கோலி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஐந்தாம் நாளில் இந்திய அணி வெற்றிக்கு 321 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த சிட்னி டெஸ்ட் போலவே இந்த போட்டியையும் இந்திய அணி ட்ரா செய்ய முயலும் என நினைத்த ஆஸ்திரேலியாவுக்கு பேரிடியாக இந்திய அணி அதிரடியாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி மீண்டும் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் கேப்டன் விராட் கோலி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘என்ன ஒரு வெற்றி… அடிலெய்ட் டெஸ்ட் தோல்விக்குப் பின்னர் அனைவரும் நம்மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். தன்முனைப்பும் ஒற்றுமையுமே வெற்றிக்குக் காரணம். வீரர்களுக்கும் அணி நிர்வாகத்துக்கும் வாழ்த்துகள். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியைக் கொண்டாடுவோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பயிற்சியாளர் புகார்.

‘டாஸும் மைதானமும்தான் காரணம்.. ’ தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பண்ட்!

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

கோயங்கா கிட்ட பண்ட் மாட்டல… பண்ட் கிட்டதான் கோயங்கா மாட்டிகிட்டாரு – நெட்டிசன்கள் ட்ரோல்!

‘எங்கள் boys கண்டிப்பாக come back கொடுப்பார்கள்’… காசி மாமா நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments