Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி ப்டைத்த புது சாதனை... இருப்பினும் தோனி தான் டாப்பு!!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (08:26 IST)
இந்திய கிரிக்கெட் அணியை 200 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வழி நடத்தி சென்ற மூன்றாவது கேப்டன் என்ற மைல்கல்லை எட்டினார் விராட் கோலி. 

 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றதை அடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 329 ரன்கள் எடுத்தது. 330 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது.  
 
கடைசி ஓவரை நடராஜன் வீச அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து அணியால் எடுக்கப்பட்டதால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த போட்டிக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியை 200 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வழி நடத்தி சென்ற மூன்றாவது கேப்டன் என்ற மைல்கல்லை எட்டினார் விராட் கோலி. 
 
ஆம், அவரது தலைமையில் இந்திய அணி 127 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளும் இதில் அடங்கும். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 332 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்தியுள்ளார். அதே போல அசாருதீன் 221 போட்டிகளில் இந்தியாவை வழி நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!

சென்னை வந்த அஸ்வினுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பு!

தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா.. அஸ்வினுக்கு நேர்ந்த அவமரியாதை!

ரோஹித் ஷர்மாவும் ஓய்வு முடிவை அறிவிப்பார்… சுனில் கவாஸ்கர் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments