Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெண்டு பேருமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்… விராட் கோலி பகிர்ந்த செல்பி!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (09:20 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிராஜ் மற்றும் இஷாந்த் ஷர்மாவோடு எடுத்துக்கொண்ட செல்பியைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோத உள்ளன. உலகின் புகழ் பெற்ற மைதானமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த தொடர் நடக்க உள்ளது. இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்திய அணி தங்களுக்குள்ளாக பிரிந்து 3 நாள் பயிற்சி ஆட்டத்தை விளையாடினார். அந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவருமே சிறப்பாக பந்துவீசினர். இறுதிப் போட்டியில் இவர்கள் இருவரில் ஒருவர்தான் அணியில் இடம்பெற முடியும் என்ற சூழலில் கேப்டன் விராட் கோலி ‘இருவருமே ஒவ்வொரு நாளும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்’ எனக் கூறி அவர்கள் இருவரோடும் எடுத்துக் கொண்ட செல்பியை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

KKR க்கு எதிராக வெற்றி பெற்ற போதும் விமர்சிக்கப்படும் மும்பை கேப்டன் ஹர்திக்… என்ன காரணம்?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அறிமுக பவுலர் அஸ்வானி குமார் அபாரம்.. முதல் வெற்றியை ருசித்த மும்பை இந்தியன்ஸ்..!

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments