Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி.. எழுந்து நின்று கைதட்டிய சச்சின்..!

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (17:13 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் அரை இறுதி போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய விராட் கோலி சதம் அடித்துள்ளார். இது அவரது ஐம்பதாவது சதமாகும்.

இதுவரை அதிகமாக சச்சின் டெண்டுல்கர் 49 சதமடித்துள்ள நிலையில் அவரது சாதனையை விராட் கோஹ்லி முறியடித்துள்ளார். இந்த போட்டியை சச்சின் டெண்டுல்கர் நேரில் பார்க்க மைதானத்திற்கு வந்த நிலையில் தன்னுடைய சாதனையை முறியடித்த விராட் கோஹ்லிக்கு எழுந்து நின்று அவர் கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 இதனை அடுத்து விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த போட்டியை பார்ப்பதற்காக நேரில் வந்திருந்த முன்னாள் மேற்கிந்திய தீவு வீரர் விவியன் ரிச்சர்ட் அவர்களும் எழுந்து நின்று கை தட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

49 சதங்கள் அடைந்தபோது சச்சினின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கூறிய நிலையில், விராட் கோஹ்லி அந்த சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு ரூ.6000 கோடி வருமானம்?

இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்.. முதல் சுற்றில் பிவி சிந்து தோல்வி..!

6 நிமிடத்தில் 10 லட்சம் லைக்குகள்… சாதனைப் படைத்த ஹர்திக் பாண்ட்யாவின் புகைப்படம்!

இந்தியா ஏ அணியுடன் இங்கிலாந்து செல்லும் கம்பீர்… காரணம் என்ன?

சாம்பியன்ஸ் கோப்பை தோல்வி… பாகிஸ்தான் அணியில் பல அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments