Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்த விதர்பா அணி

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2018 (20:42 IST)
இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கிரிக்கெட் தொடரில் விதர்பா அணி வெற்றிப்பெற்று வரலாறு படைத்துள்ளது.

 
91 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரான ரஞ்சி கோப்பை தொடர் அக்டோபர் மாதம் 6ம் தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டியில் டெல்லி மற்றும் விதர்பா அணிகள் விளையாடியது. இதில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 547 ரன்கள் குவித்தது. டெல்லி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 280 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய விதர்பா அணி 32 ரன்கள் விளாசி வெற்றிப்பெற்றது.
 
விதர்பா அணி 4வது நாளிலேயே டெல்லி அணியை வீழ்த்தி ரஞ்சி கோப்பையை வென்றது. தொடர்ச்சியாக மூன்று முறை ரஞ்சி கோப்பையை வென்று விதர்பா அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

3ஆவது முறையாக ஐபிஎல் மகுடம் சூட்டிய கொல்கத்தா.!! ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்தி அசத்தல்..!!

ஐதராபாத்தின் அதிரடி என்ன ஆச்சு? 113 ரன்களுக்கு ஆல் அவுட்.. கேகேஆருக்கு கோப்பை உறுதியா?

டாஸ் வென்றவர்கள் கோப்பையையும் வெல்வார்களா? ஒரே நொடியில் பேட் கம்மின்ஸ் எடுத்த முடிவு..!

தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா.! டி-20 தொடரை வென்ற மேற்கிந்திய அணி..!

இறுதி போட்டியில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்: பேட் கம்மின்ஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments