Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாங்க முடியாத தோல்வி… ஷார்ஜா ஸ்டேடியத்தில் அடிதடி!

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (08:52 IST)
பாகிஸ்தான் வெற்றி பெற்றதும் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் ரகளை.


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதால் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணி 130 என்ற இலக்கை நோக்கி விளையாடி நிலையில்  19.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதனை அடுத்து பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது.

இந்நிலையில் போட்டியின் 19வது ஓவரில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ஃபரீத் அஹ்மத் பாலில் பாகிஸ்தானின் ஆசிப் அலி அவுட் ஆனதால் அவர் கோபமாக பேட்டை உயர்த்தி ஆப்கான் விரரை அடிக்க போனதால் இருநாட்டு வீரகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டது. இது ரசிகர்களிடமும் காணப்பட்டது.

ஆம் போட்டி முடிவில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் குளிர்ச்சியை இழந்து, இருக்கைகளை உடைத்து பாகிஸ்தான் ரசிகர்களை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments