Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் ’அழியா புகழை' பெற இருக்கும் உசைன் போல்ட்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (12:33 IST)
ரியோ ஒலிம்பிக்கில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் மேற்கொண்டு இரண்டு தங்கம் பெற்றால், மூன்று ஒலிம்பிக்கில் தொடர்ந்து தடகளத்தின் மூன்று பிரிவிலும் தங்கம் வென்ற ஒரே வீரர் என்ற அழியா புகழுக்கு சொந்தக்காரர் ஆகி விடுவார்.
 

 
பிரேசிலில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 100மீ ஓட்டத்தில் ஜமைக்காவின் உலக சாம்பியன் உசைன் போல்ட் 3ஆவது முறையாகத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
 
மூன்று முறை தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வென்றிருக்கும் உசைன் போல்ட், இந்த சாதனையை படைத்திருக்கும் முதலாவது நபர் என்ற பெருமை பெற்றிருக்கிறார்.
 
மேலும், இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் தடகளப் போட்டியில் மூன்று பிரிவிலும், அதாவது 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டம் என மூன்று போட்டிகளில் மூன்று முறை தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளது.
 
2011ஆம் ஆண்டு உலக சாம்பியன் போட்டியில் தகுதி இழந்தததை தவிர்த்து, கடந்த எட்டு ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய தனிநபர் ஓட்டப்போட்டிகள் அனைத்திலும் போல்ட் வெற்றிபெற்றிருக்கிறார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடத்தில் கூறிய உசைன் போல்ட், “சில பேர் என்னால் அழியாத புகழை பெற முடியும் கூறுகிறார்கள். ஆனால், அதற்கு இன்னும் இரண்டு தங்கப்பதக்கங்களை வெல்ல வேண்டியுள்ளது. 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் இனிமையாக இருக்கப்போகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments