இன்று டிஎன்பிஎல் இறுதி போட்டி.. சாம்பியன் பட்டம் எந்த அணிக்கு?

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (07:38 IST)
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்த தொடர் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எட்டு அணிகள் விளையாடிய இந்த தொடரில் இன்று இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் இன்றைய இறுதிப் போட்டியில் வெல்லும் அணியே இந்த ஆண்டின் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டம் பெரும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய இறுதிப்போட்டியில் திருநெல்வேலி மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இதில் கோவை மற்றும் நெல்லை அணிகள் மோத உள்ளன. கோவை அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் நெல்லை அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது 
 
இரு அணிகளுமே சம பலமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் இன்றைய போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை பெறப்போகும் அணி எந்த அணி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
கோவை அணியை பொறுத்தவரை ஷாருக்கான் கேப்டனாக உள்ளார் என்பதும் அவரது தலைமையில் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லை அணியின் கேப்டன் ஆன கார்த்திக் தனது அணியை வெற்றிகரமாக வழி நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments