ராஜ்கோட்டில் இன்று 2வது டி-20: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

Webdunia
சனி, 4 நவம்பர் 2017 (13:17 IST)
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை எளிதாக வென்ற இந்தியா, தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே இந்தியா முதல் டி-20 போட்டியை அபாரமாக வென்றுவிட்ட நிலையில் இன்று ராஜ்கோட்டில் 2வது டி-20 போட்டி இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.



 
 
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் தொடரை கைப்பற்றிவிடும் என்பதால் இந்திய அணி தனது முழு திறமையை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் வரிசையில் தவான், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, பாண்டியா, தோனி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளதால் இந்தியாவுக்கு பிளஸ்ஸாக உள்ளது. அதேபோல் பந்துவீச்சில் பும்ரா, புவனேஷ்குமார், சாஹல், அக்சர் பட்டேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
 
இதேபோல் நியூசிலாந்து அணியை பொருத்தவரையில் முண்ட்ரோ, மார்ட்டி கப்தில், கேப்டன் வில்லியம்சன், லாதம் ஆகியோர் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார்கள். சவுதி, பவுல்ட், சாண்ட்னெர் ஆகிய பவுலர்களும் திறமை வாய்ந்தவர்கள். நியூசிலாந்து அணியும் தொடரை இழந்துவிடாமல் இருக்க முழு திறமையையும் வெளிப்படுத்தும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments