Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரண்டாவது டி20, இந்தியாவுக்கு தொடர் வெற்றி கிடைக்குமா?

Webdunia
ஞாயிறு, 26 ஜனவரி 2020 (09:12 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றது. இதனையடுத்து இன்று இரு அணிகளுக்கும் இடையே 2வது டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் வென்று இந்திய அணி தொடர் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
நியூசிலாந்து அணியை பொருத்தவரையில் முன்ரோ, கேப்டன் வில்லியம்சன், டெய்லர் மற்றும் கிராந்தோம் ஆகிய பேட்ஸ்மேன்களும், செளதி, சோதி, சாண்ட்னர், டிக்னர் ஆகிய பந்துவீச்சாளர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
 
அதேபோல் இந்திய அணியில் ரோஹித் சர்மா, கேப்டன் விராத் கோஹ்லி ஆகியோர் எப்போதும் போல் நல்ல ஃபார்மில் உள்ளனர். கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர்களின் அதிரடி ஆட்டமும் இந்திய அணிக்கு பலமாக கருதப்படுகிறது. பந்துவீச்சை பொருத்தவரையில் பும்ரா, ஷமி, ஷர்துல் தாக்கூர், சாஹல் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
முதல் டி20 போட்டி நடைபெற்ற ஆக்லாந்து மைதானத்தில் தான் இன்றைய இரண்டாவது டி20 போட்டியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரு அணிகளுக்கு இடையே ஜனவரி 29, ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் அடுத்த மூன்று போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

என்ன ஆச்சு கிங் கோலிக்கு?.... போட்டிக்கு இடையில் மூச்சு வாங்கி திணறல்!

முட்டிக் கொண்ட பும்ரா & கருண்… சமாதானப் படுத்திய சக வீரர்கள் – ரோஹித்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

அடுத்த கட்டுரையில்
Show comments