Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 4வது டெஸ்ட் போட்டி: தொடரை சமன்செய்யுமா இந்தியா?

Webdunia
வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (06:51 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இந்த போட்டியை இந்தியா வென்றால் தொடர் சமனாகும். இங்கிலாந்து வென்றால் அந்த அணி தொடரை வெல்லும். எனவே இந்த போட்டியை வெல்ல இரண்டு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன

ஏற்கனவே நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது போட்டியில் இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் முரளிவிஜய் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவருக்கு பதிலாக இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். முரளி விஜய் முதல் டெஸ்ட் போட்டியில் 20 மற்றும் 6 ரன்களும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆனதால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் குல்தீப் யாதவ் எதிர்பார்த்தபடி விக்கெட்டுக்களை வீழ்த்தாததால் அவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இர்ஃபான் பதான் மட்டும் சொல்லல… தோனிய சோதனை செய்யணும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பிசிசிஐ தலைவர் ஆகிறாரா சச்சின் டெண்டுல்கர்?

முதல் 5 போட்டிகளிலும் 50+ ரன்கள் அடித்த உலகின் முதல் வீரர்.. புதிய உலக சாதனை..!

தோனியின் அந்த குணம் என்னைப் பிரமிக்கவைக்கிறது… குட்டி ABD கருத்து!

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ஷிகார் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அடுத்த கட்டுரையில்
Show comments