Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிந்துவின் அசுர வெற்றி: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் காலிறுதிக்கு முன்னேற்றம்!

Siva
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (07:51 IST)
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் 29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சீனாவின் வாங் ஷி யியை எதிர்கொண்ட சிந்து, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தார்.
 
போட்டியின் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, தனது பலமான ஸ்மாஷ்கள் மற்றும் துல்லியமான நெட் ஷாட்டுகள் மூலம் வாங் ஷி யிக்கு கடுமையான சவால்களை அளித்தார்.
 
இந்த போட்டியில் பிவி சிந்து முதல் இரண்டு செட்டையும் வென்று, நேர் செட்களில் வாங் ஷி யியை வீழ்த்தி அசத்தினார்.  இந்த வெற்றியைத் தொடர்ந்து, பி.வி.சிந்து காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். 
 
சிந்துவின் இந்த அசுரத்தனமான வெற்றி, இந்திய பேட்மிண்டன் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்துவின் அசுர வெற்றி: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் காலிறுதிக்கு முன்னேற்றம்!

மூன்று மாதங்களுக்குப் பிறகு சோஷியல் மீடியாவில் பதிவிட்ட RCB நிர்வாகம்!

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் பங்குபெறும் ரோஹித் ஷர்மா?

அடுத்த கட்டுரையில்
Show comments