Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெர்த் மைதானத்திலேயே சிறந்த ரன் அவுட் - தோல்வியின் பிடியில் ஆஸி. [வீடியோ]

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2016 (12:47 IST)
தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்று வருகிறது.
 

 
இதில் தென்ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 242 ரன்களும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 244 ரன்களும் சேர்த்திருந்தன. பின்னர், தென்ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 540 ரன்கள் குவித்தது. இதனால், ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி இலக்காக 539 ஓட்டங்களை நிர்ணயித்தது.
 
தொடர்ந்து கடின இலக்கை ஆஸ்திரேலியா துரத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று 4ஆவது ஆட்டத்தில், டேவிட் வார்னரை 35 ரன்கள் எடுத்திருந்தபோது, ரபாடா வீசிய பந்தை தட்டிவிட்டு ஓடினார். ஆனால், தென் ஆப்ரிக்காவை வீரர் டெம்பா பவுமா அபாரமாக வார்னரை ரன் அவுட் செய்தார்.
 
இந்த ரன் அவுட் பெர்த் மைதானத்திலேயே சிறந்த ரன் அவுட் வர்ணனையாளர்கள் குறிப்பிட்டனர். மேலும், இந்த ரன் அவுட்டை தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் பார்த்திருந்தால் கண்டிப்பாக வியந்து போயிருப்பார் என வர்ணித்தனர்.

தற்போது வரை ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிபெற இன்னும் 179 ரன்கள் தேவை. ஆனால், கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ இங்கே:
 

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments