Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ்

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (22:32 IST)
புரோ கபடி போட்டி தொடரில் தமிழ்தலைவாஸ் அணி கடந்த திங்கட்கிழமை ஜெய்ப்பூர் அணிக்கு எதிராக போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இன்று மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பி உள்ளது

இன்று நடைபெற்ற பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது

புரோ கபடி போட்டி தொடரில் தொடர் தோல்விகளை பெற்று வந்த தமிழ் தலைவாஸ் அணி கடந்த திங்களன்று ஜெய்ப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் வென்றதால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி விட்டது என தமிழ் தலைவாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்காத வகையில் இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாசல் தோல்வியுற்றது. இன்றைய வெற்றியின் மூலம் பெங்கால் அணி முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது

இன்று நடைபெற்ற போட்டியில் பெங்கால் அணி 33 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 29 புள்ளிகளும் பெற்றதை அடுத்து பெங்கால் அணி அதிரடியாக வெற்றி பெற்றது

இதனை அடுத்து இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி உபி அணியை வென்றது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 41 புள்ளிகளும் உபி அணி 36 புள்ளிகளும் எடுத்ததால் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்த நிலையில் பெங்கால், டெல்லி, ஹரியானா, உபி மற்றும் மும்பை ஆகிய அணிகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments