Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2024: இன்று தமிழ் தலைவாஸ் போட்டி.. 9வது இடத்தில் இருந்து முன்னேறுமா?

Siva
வியாழன், 14 நவம்பர் 2024 (18:17 IST)
புரோ கபடி தொடரில் இன்று தமிழ் தலைவாஸ் போட்டி நடைபெற இருக்கிறது. ஒன்பதாவது இடத்தில் இருக்கும் அந்த அணி இன்றைய போட்டியில் வென்றால் புள்ளி பட்டியலில் முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக புரோ கபடி விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் தமிழ் தலைவாஸ் அணி மும்பை அணியுடன் மோத உள்ளது. இன்னொரு போட்டியில் உத்தரப்பிரதேச அணி தெலுங்கு டைட்டான்ஸ் அணியுடன் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளி பட்டியலில் தற்போது தமிழ் தலைவாஸ் அணி 21 புள்ளிகள் மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது. 8 போட்டிகளில் விளையாடிய அந்த அணி மூன்று வெற்றிகள் மற்றும் நான்கு தோல்விகள் சந்தித்துள்ளது. மேலும், ஒரு போட்டியில் வெற்றி தோல்வி இன்றி முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றால், பெங்கால் வாரியர்ஸை பின்னுக்கு தள்ளி எட்டாவது இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த போட்டி தமிழ் தலைவாஸ் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது புள்ளி பட்டியலில் ஹரியானா, புனே, மும்பை மற்றும் பாட்னா ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. டெல்லி, தெலுங்கு, ஜெய்ப்பூர், பெங்கால் ஆகிய அணிகள் அடுத்த நான்கு இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் குஜராத் அணி உள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காபா மைதானத்தைப் பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம்… ஷுப்மன் கில் தடாலடி!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்!

காபா டெஸ்ட்டில் மீண்டும் அணிக்குள் திரும்பும் ஜோஷ் ஹேசில்வுட்!

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்த ஜேசன் கில்லஸ்பி!

ஷமி ஆஸ்திரேலியா செல்ல மாட்டாரா?... ரசிகர்களை ஏமாற்றிய அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments