Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் மைதானங்களைக் கைப்பற்றிய தாலிபான்கள்… ஆப்கானிஸ்தானில் பதற்றம்!

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (16:06 IST)
ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெரும்பாலான கிரிக்கெட் மைதானங்கள் இப்போது தாலிபான்கள் வசம் வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கனில் முகாமிட்டு இருந்த அமெரிக்கப் படைகள் நாடு திரும்பியதை அடுத்து தலிபான்களின் தாக்குதல் அதிகமாகியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். நடந்து வரும் உள்நாட்டுப் போரில் சில முக்கியமான பகுதிகளை இப்போது தாலிபான்கள் கைப்பற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது.

அந்தவகையில் அந்த நாட்டில் இருக்கும் முக்கியமான கிரிக்கெட் மைதானங்கள் இப்போது தாலிபான்கள் வசம் சென்றுள்ளது. இதில் காந்தஹார் சர்வதேச கிரிக்கெட் மைதானம், குண்டுஸ் கிரிக்கெட் மைதானம், கோஸ்ட் சிட்டி கிரிக்கெட் மைதானம் ஆகியவை அடக்கம். இதையடுத்து பல்க் கிரிக்கெட் மைதானத்தை கைப்பற்றுவதற்கான சண்டை இப்போது நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை நடக்க உள்ள நிலையில் இது ஆப்கான் கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments