Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுரேஷ் ரெய்னா சாதனை: ஐபிஎல் போட்டிகளில் 3500 ரன்கள் குவித்த முதல் வீரர்

சுரேஷ் ரெய்னா சாதனை: ஐபிஎல் போட்டிகளில் 3500 ரன்கள் குவித்த முதல் வீரர்
, வெள்ளி, 1 மே 2015 (15:41 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் 3ஆயிரத்து 500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
 
நேற்று வியாழக்கிழமை [30-04-15] ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 8ஆவது ஐபிஎல் போட்டியின் 30ஆவது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
 

 
ஆனாலும் நேற்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவர் 6 ரன்கள் எடுத்திருந்தபோது ஐபிஎல் போட்டியில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தினார். அதாவது, ஐபிஎல் வரலாற்றில் 3ஆயிரத்து 500 ரன்களை தொட்ட முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
 
இதுவரை அவர் 123 ஆட்டங்களில் விளையாடி 3ஆயிரத்து 506 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா 119 ஆட்டங்களில் விளையாடி 3,147 ரன்கள் குவித்துள்ளார்.
 
3ஆவது இடத்தில் கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் 111 ஆட்டங்களில் விளையாடி 3,015 ரன்களும், 4ஆவது இடத்தில் பெங்களூரு அணி வீரர் கிறிஸ் கெய்ல் 74 போட்டிகளில் விளையாடி 2927 ரன்களும் குவித்துள்ளனர்.
 
இந்திய அனியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி 120 போட்டிகளில் விளையாடி 2790 ரன்கள் குவித்து 5ஆவது இடத்தில் உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil