Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியை புரட்டி எடுத்த ஐதராபாத். வில்லியம்சன் எடுத்த விஸ்வரூபம்

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2017 (07:04 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணி எந்தவித டென்ஷனும் இல்லாமல் டெல்லி அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.



 


முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்து களத்தில் இறங்கியது. கேப்டன் வார்னர் 4 ரன்களில் அவுட் ஆகிவிட்டாலும் தவான் மற்றும் வில்லியம்சன் பொறுப்பாக விளையாடியதால் ஸ்கொர் 20 ஓவர்களில் 191 என்று உயர்ந்தது. வில்லியம்சன் 51 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உள்பட 89 ரன்கள் அடித்தார்.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. எஸ்.எஸ்.ஐயர் 50 ரன்களும், சாம்சன் 42 ரன்களும் எடுத்தனர்.

இந்த போட்டியில் பெற்ற வெற்றியால் ஐதராபாத் அணி முதலிடத்தை நெருங்கிவிட்டது. கொல்கத்தா மற்றும் ஐதராபாத் தலா 8 புள்ளிகளை பெற்றிருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் தற்போது இரண்டாவது இடத்தில் ஐதராபாத் உள்ளது.

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

இனிமேல் ஐபிஎல் போட்டிகளுக்கு கட்டண சலுகை கிடையாது: சென்னை மாநகர போக்குவரத்து கழகம்..!

பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே.. இதுக்கா இவ்ளோ அலப்பறை! – ஆர்சிபியை கலாய்க்கும் சக கிரிக்கெட் வீரர்கள்!

இவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் கோலி படைத்த சாதனை!

ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments