Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு புதிய பயிற்சியாளர்.. லாராவின் பதவி காலம் முடிந்தது..!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (17:07 IST)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக இருந்த லாராவின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் தற்போது அணியின் நிர்வாகம் புதிய பயிற்சியாளரை நியமனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஐபிஎல் அணிகளில் ஒன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி என்பதும் சன் குழுமத்திற்கு சொந்தமான இந்த அணி மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி, என்பவர் தான் சன்ரைசர்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 
இதுவரை தலைமை பயிற்சியாளராக இருந்த லாராவின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் தற்போது அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளரை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

அடுத்த கட்டுரையில்
Show comments