Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரை இழந்தது இந்தியா: தென் ஆப்ரிக்காவிடம் அடிபணிந்த சோகம்!

Webdunia
புதன், 17 ஜனவரி 2018 (16:27 IST)
தென் ஆப்ரிக்காவிறு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றுள்ளது. 
 
தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் போட்டியை வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் செஞ்சுரியனில் நடந்தது. இந்த போட்டியில், தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 335 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்கள். 
 
தென் ஆப்ரிக்கா இரண்டாவது இன்னிங்சில் 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் பின்னர் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சொதப்ப, அவ்வப்போது ரோகித் சர்மா ஆறுதல் அளித்தார். 
 
ஒரு கட்டத்தில், ரோகித் சர்மா 47 ரன்களில் வெளியேற, தென் ஆப்ரிக்க அணியின் வெற்றி உறுதியானது. அதேபோல், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் தென் ஆப்ரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளர் ஆன டேரன் சமி!

சதத்தை நோக்கி கே.எல்.ராகுல்.. மீண்டும் ஏமாற்றிய ரோகித் சர்மா.. ஸ்கோர் விவரங்கள்..!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

பும்ரா குறித்த இனவாத கமெண்ட்… மன்னிப்புக் கோரிய வர்ணனையாளர் இஷா குஹா!

சச்சினைப் பார்த்து கத்துக்கோங்க… ஒரே மாதிரி அவுட் ஆகும் கோலிக்கு ரசிகர்கள் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments