ஸ்ரேயாஸ்க்கு உண்மையான டெஸ்ட் தென் ஆப்பிரிக்காவில்தான்! கங்குலி கருத்து!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (10:33 IST)
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ஸ்ரேயாஸ் ஐயருக்கு தென் ஆப்பிரிக்காவில் சவால்கள் காத்திருப்பதாக பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

சமீபத்தில் நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் டெஸ்ட்டிலேயே சதம் மற்றும் அரைசதம் அடித்துக் கலக்கினார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா செல்லும் டெஸ்ட் அணியிலும் அவர் இணைந்துள்ளார்.

அவரைப் பற்றி பேசியுள்ள இந்திய கிரிக்க்ட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி ‘ஸ்ரேயாஸுக்கு உண்மையான டெஸ்ட் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்தான். பந்துகள் ஸ்விங் ஆகி எழும்பும் பிட்ச்களில்தான் அவர் தன்னை நிரூபிக்க முடியும். நிச்சயம் அவர் நிமிர்ந்து விளையாடுவார் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

விவாகரத்துக்கு பின் பயந்து நடுங்கினேன்.. சானியா மிர்சாவின் அதிர்ச்சி பேட்டி..!

நம்ம புள்ளைங்கதான் டாப்ல… ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியா ஆதிக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments